tamilnadu

img

கொடுங்கையூரில் திடக்கழிவுகள் அகற்றம்

கொடுங்கையூரில் திடக்கழிவுகள் அகற்றம்

சென்னை, அக். 2- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப்  பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் ஆயிரம் டன் கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவு கள் அகற்றப்பட்டு வருகின்றன. மண்டலம் ஒன்று முதல் எட்டு வரையில் சேகரிக்கப்படும் திடக்கழிவு கள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்தன. இதன் காரண மாக கொடுங்கையூர் வளாகத்தில் குப்பைகள் அதிகரித்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து கொடுங்கை யூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் துரித ப்படுத்தப்பட்டன. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. முதல்வரின் உத்தரவின்படி ரூ.641கோடி மதிப்பீட்டில்  கொடுங்கையூரில் உள்ள திடக் கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி ஆறு தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப் பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66 லட்சத்து  52 ஆயிரம் டன் ஆகும். அதில் இதுவரை 20 லட்சத்து 16 ஆயிரம் டன் திடக்கழிவு கள் பயோமைனிங் முறையில் அகற்றப் பட்டுள்ளது. தொகுப்பு ஒன்று மற்றும் இரண்டின் வாயிலாக சுமார் மூன்று ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் வாயி லாக ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மீதமுள்ள குப்பைகளை பயோமை னிங் முறையில் அகற்றும் நடவடிக்கை கள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து மக்கள் நலன் பாதுகாக்கப் பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.