tamilnadu

img

எஸ்கேபி பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவர்கள் சாதனை

எஸ்கேபி பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவர்கள் சாதனை

திருவண்ணாமலை, செப்.24- திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 100 பேர், தலை சிறந்த வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் 30 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை நிறைவு செய்தனர். இதையடுத்து, அவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. மாணவர்கள் தங்களின் ஆய்வுக்கான கட்டுரை கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். இந்த விழாவில் கல்லூரித் தலைவர் கு. கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கே.வி. அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர்  எஸ். பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் என்.புருஷோத்தமன் வர வேற்றார். உடன் பிஆர்ஓ சையது ஜஹிருத்தீன் கலந்து கொண்டார்.