மாநகர போக்குவரத்து கழகம், பெரம்பூர் பணிமனையில் 30 ஆண்டுள் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற, சிஐடியு தலைவர் எம்.சுப்பிரமணிக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. எம்டிசி மத்திய சங்க இணைச்செயலாளர் எஸ்.மதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநாயினார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் வி.தயானந்தன், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பெரம்பூர் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், சிம்சன் கோவிந்தராஜ், சகோதரசங்க தலைவர்கள் ஏ.வெங்கடேசன், வடிவேலு, மணிநாதன் உள்ளிட்டோர் பேசினர்.