அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 200 பேராசிரியர்கள் பற்றாக்குறை
சிதம்பரம், ஆக. 8 - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பூபதி, மாவட்ட செயலாளர் சௌமியா ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் 20-க்கும் மேற்பட்ட துறைகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்றும், இந்த பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 718 பேராசிரியர்கள் மட்டுமே பணி யாற்றி வருகிறார்கள். இதனால் சில துறை களில் மாணவர்களுக்கு ஏற்றவாறு பேராசி ரியர்கள் இல்லை. சில துறைகளில் மாண வர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது ஆனால் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் 200-க்கும் மேற்பட்ட பேரா சிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இங்கு பணியாற்றிய பேரா சிரியர்கள் நிதி சிக்கலை காரணம் காட்டி அரசு கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிலையங்களுக்கு பணி நிரவல்களுக்கு சென்றுள்ளதால் தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் உடனடியாக மாணவர்களுக்கு பற்றாக்குறையாக உள்ள பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.