tamilnadu

கள்ளக்குறிச்சியில் புதிதாக சட்டக்கல்லூரி வேளாண் கல்லூரி அமைக்கவேண்டும் எஸ்எப்ஐ மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் புதிதாக சட்டக்கல்லூரி வேளாண் கல்லூரி அமைக்கவேண்டும் எஸ்எப்ஐ மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 27– கள்ளக்குறிச்சியில் புதிதாக சட்டக் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூ ரியை உருவாக்கிட  இந்திய மாணவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட 16 வது மாநாடு ஞாயிறு அன்று (ஜூலை, 27) உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் மு.சுந்தரவேல் தலைமை தாங்கினார். சங்கத்தின் கொடியினைமாவட்ட துணைத் தலைவர் ஏ.கஸ்தூரி ஏற்றி வைத்தார்.மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.டார்வின் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலாளர் இ பிரகாஷ்காரத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் பவித்திரன் துவக்கிவைத்துப்பேசினார். ஆசிரியர் கு.சுதா ஆசிரியர் எஸ்.திருங்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சிவகுமார் மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாவட்ட செய லாளர் சின்னராசு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.குமரவேல் நிறைவுறையையு,மாவட்ட குழு ஆர் ஜோநிர்மல்ராஜ் நன்றி உரை யாற்றினார். நிர்வாகிகள் தேர்வு  17 பேர் கொண்ட மாவட்ட குழுவிற்கு தலைவர் ஜே.டார்வின்,செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் ஜோதி நிர்மல்,துணைத் தலைவர் கோமதி, துணைச் செயலாளர் சஞ்சய், தேர்வு செய்யப்பட்டனர். பேரணி  முன்னதாக உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையிலிருந்து சென்னை சாலை பேருந்து நிலையம் உழவர் சந்தை வழியாக பேரணியாக புறப்பட்ட மாணவர் சங்க பேரணியை வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகி ஜி.ஆனந்தன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தீர்மானங்கள் உளுந்தூர்பேட்டையில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிக்கு உடனடியாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றும்,சங்கராபுரம் பகுதியில் புதிய அரசு கலைக்கல்லூரி துவங்கிட வேண்டும்,ரிஷிவந்தியம் அடுத்த பாவன்தூர் அரசு கலை கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு காலை, மாலை என இரு வேலையும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்,இக்கல்லூரியில் அனைத்து துறைகளுக்கும் பேராசிரியர்களை நிய மனம் செய்ய வேண்டும்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பழுத டைந்துள்ள கட்டிடத்தை சரி செய்து, சுத்தமான குடிநீர் தரமான உணவு தரு வதை உறுதி செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.