tamilnadu

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் ஈஷா மையம் - மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை, செப். 7 - அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த கோவை ஈஷா யோகா மைய டாக்டர்கள் மீதும் ஈஷா யோகா மையத்தின் தொடர்ச்சியான இத்தகைய அத்துமீறல் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாதர் சங்கத் தின் மாநிலத் தலைவர் எஸ். வால ண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள  அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி யில் பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்து நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக நடந்த மருத்துவ முகாமில் ஈஷா யோகா மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்று உள்ளது. அப்போது, பரிசோத னைக்காக வந்த மாணவிகளிடம் ஈஷா யோகா மையத்தின் மருத்து வர் சரவணமூர்த்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் குழந்தைகள் நலத் துறையினர் பேரூர் மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்து மருத்துவர் சரவணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் எந்த வித வரைமுறைகளும் இன்றி யார் வேண்டுமானாலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம் கள், என்சிசி பயிற்சி முகாம், தன்னம்பிக்கை சிறப்புரை என்ற பெயரில் அரசு பள்ளிகளில் நுழை ந்து நிகழ்ச்சிகளை நடத்துவது, மாணவிகளிடம் அத்து மீறுவது என்பது நடைபெற்று வருகிறது. 

அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துகிற போது மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனு மதி பெற்று நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை வலி யுறுத்திட வேண்டும்.

மேற்கண்ட ஈஷா யோகா மையம் கோவை மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு சர்ச்சைக் குரிய பிரச்சனைகளில் ஏற்கனவே சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சூழலில் இம்மையத்தின் சார்பில் மருத்துவ முகாமை அரசு பள்ளிக ளில் நடத்த அனுமதிப்பதை ஏற்க முடியாது, மேலும் ஏற்கெனவே இம்மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடத்தி உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பின் மருத்துவர் மீது மட்டுமல்லாது, ஈஷா யோகா மையத்தின் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.