விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unit) கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பழனி தலைமையில் சனிக்கிழமை (ஜூன்29) நடைபெற்றது.