tamilnadu

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், காசா மீதான இஸ்ரேலின் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், காசா மீதான போரை நிறுத்த வேண்டும் என்ற குரலை மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிப்பேன் என்று துணிச்சலாக பேசியுள்ளார். 
அவருக்கு நமது வணக்கத்தை தெரிவிக்கிறோம். 
கிரிமினல் பைடன் நிர்வாகத்தால் தலைமை தாங்கப்படுகிற அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் பாலஸ்தீனர்கள் மீதான - சற்றும் ஈவிரக்கமற்ற, மனிதத்தன்மையற்ற கொடிய யுத்தம் நீடிப்பதற்கு அனுமதித்திருக்கிறது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும். மோடி அரசு உலக அரங்கில் இதை வலுவாக வலியுறுத்த வேண்டும்.