tamilnadu

சீரும் சிறப்புமாக நடவடிக்கை!

 சென்னை,ஜூலை 12- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்குட்பட்ட உத்தமபாளை யம் பகுதியில் கடந்த 6 ஆண்டு களில் காட்டு யானை தாக்கி 11  பேர் பலியாகியுள்ளனர்.  சமீபத்தில் பலியான அய்யாவு குடும்பத் துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பி னர் ஜக்கையனும், நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதி யில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கடந்த 20 நாட்களாக விவசாயிகளின் பயிர்களை சேதப்  படுத்தி வருவதை தடுக்க வேண் டும் என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபு பக்கரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த பேசிய  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க சீரும் சிறப்புமாக நடவ டிக்கை எடுத்து வருவதாக” கூறி னார்.