tamilnadu

img

தேர்தல் பத்திர விவரங்களுக்கு அவகாசமா?

சென்னை, மார்ச் 5- தேர்தல் பத்திரங் கள் தொடர்பான வழக்  கில் ‘ஸ்டேட் பாங்க் ஆப்  இந்தியா’ (SBI) வங்கியின் வாதம் மிக வும் கேவலமானது என தமிழ்நாடு தொழில்  நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் சாடியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி, ஒன்றிய பாஜக அரசு 2018-ஆம்  ஆண்டு தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை நிறை வேற்றியது. இதன்மூலம், யார் கொடுத்தது என்ற விவரத்தையே வெளியிடாமல் பல ஆயி ரம் கோடி ரூபாய் பணத்தையும் கட்சி நிதி யாக வாங்கிக் குவித்தது. ஆனால், தேர்தல்  பத்திரங்கள் சட்டத்தை அதிரடியாக ரத்து  செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை எஸ்பிஐ வங்கி மார்ச் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

அவ்வாறு வழங்கும் பட்சத்தில், பாஜக-வுக்கு நன்கொடை கொடுத்த கருப்புப் பண  பேர்வழிகள், கார்ப்பரேட்டுகள் யார் என  தெரிந்துவிடும்; இது மக்களவைத் தேர்தலில்  பாஜகவுக்கே எதிராகத் திரும்பும் என்பதால், மோடி அரசானது, எஸ்பிஐ வங்கியையே தூண்டிவிட்டு, அதன்படி தகவல்களை அளிக்க 4 மாத கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.  பழனிவேல் தியாகராஜனும் தனது கண்ட னத்தைத் தெரிவித்துள்ளார்.

“நானும் 20 ஆண்டுகளுக்கு மேலாக வங்கி யில் பணியாற்றி இருக்கிறேன். ஒரு வங்கி  நடத்துவதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விடம் அனுமதி பெற சில அடிப்படை தொழில்  நுட்ப தகுதிகள் உள்ளது. இந்தியா உல கத்திலேயே ஐந்தாவது மிகப்பெரிய பொரு ளாதாரம். இவ்வளவு பெரிய பொருளாதா ரம் கொண்ட ஒரு நாட்டில் உள்ள மிகப்பெரிய  வங்கி ஒன்றின் மிகக் குறைவான ஒரு தக வலை வழங்க முடியவில்லை என்பதை கேட்  கும்போதே என் உடல் நடுங்குகிறது. வங்கி கள் கட்டமைப்பு ஒழுங்காக இருக்கிறதா, இல்லையா? என்று பயம் வருகிறது. இதெல்  லாம் கேவலமான சப்மிஷன். நீதிமன்றம் இந்த  காரணத்தை எல்லாம் தூக்கி வீசிவிட்டு நாளை வந்து கொடுக்க வேண்டும் என்று  சொன்னால், அந்த அளவிற்கு கம்ப்யூட்டர்  சிஸ்டம் இருக்க வேண்டும். இல்லையென் றால், அவர்கள் வங்கி தொழிலில் இருக்கக் கூடாது” என்று சாடியுள்ளார்.