சென்னையில் உள்ள இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி : Skilled Artisans
காலியிடங்கள் : 10
சம்பளம் : மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு : 1.7.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எம்வி மெக்கானிக் பாடப்பிரிவிற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச தகுதியான 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்டப் பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.400. எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை : www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Senior Manager. Mail Motor Service, No:37, Greams Road, Chennai 600 006
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் : 30.8.2024
மேலும் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_31072024_Skilled_Artisan_English.pdf