“பாஜக ஆட்சியில் கார்ப்பரேட்டுக்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ. 443 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ 10 ஆயிரம் கடன் பெற்று, அடகு வைத்த நகையை திருப்ப முடியவில்லையெனில், அதனை ஏலம் விட விளம்பரப்படுத்திவிட்டு, பெருமுதலாளிகளின் பெயரை வெளியிடத் தடை விதிக்கும் சட்டத்தை மட்டும் பாஜக முறையாக கடைப்பிடிக்கிறது” என்று சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் விமர்சித்துள்ளார்.