tamilnadu

img

ஆர்.எஸ்.பாரதி இடைக்காலப் பிணையில் விடுவிப்பு

சென்னை:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள் ளார்.திமுக கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதாகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சனிக்கிழமை ( மே 23) அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு எழும்பூர் குற்ற வியல் நீதிமன்றத் தில் முன்னிலைப்படுத்தப் பட்டார்.விசாரணையில் நீதிபதி செல் வக்குமார், ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார். மேலும் வரும் ஜூன் ஒன்றாம் தேதி ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி பிணை பெற மனு அளிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்
திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து  அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, கொரோனா கால ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் “திசை திருப்ப”, குரோத எண்ணத்துடன் எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற தில்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கெல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது” என்று தெரிவித்துள்ளார்.

அரசுக்கு அவப்பெயர்
தி.க. தலைவர் கி.வீரமணி: தன்மீது விமர்சனம் வந்தபோது, அது பற்றிய தன்னிலை விளக் கத்தை ஆர்.எஸ்.பாரதி அப்போதே கூறியதோடு, அதையும் மீறி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறி வருத்தமும் தெரிவித்தார். இந்நிலையில், இத்தகைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழக அரசுக்குத் தேவையற்ற அவப்பெயரைத் தான் ஏற்படுத்தும். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

திறமையற்ற  அரசு...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்று ஆர்?.எஸ்.பாரதி தெரிவித்த பின்னரும், கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் சந்தித்து வரும் பிரச் சனைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அதிமுக அரசு, தற்போது  பாரதியை கைது செய்திருப்பது இதயமற்ற அரசு என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.

பழிவாங்கும் போக்கு...
விசிக தலைவர் தொல். திருமாவளவன்: “கொரோனா முழு அடைப்பு நெருக்கடி உள்ள இந்தச் சூழலிலும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறியிருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தலைமையில் நடத்தப் பட வேண்டிய சீராய்வு கூட்டம் கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற வில்லை. இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்குத் தலித் மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறை யோடு இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.இந்நிலையில், அந்த சட்டத் தைப் பயன்படுத்தி அரசியல்பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப் பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக் கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், ஆர்.எஸ். பாரதி கைது விவகாரம் தொடர் பாக திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக் கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் மே 24 ஞாயிற்றுக்கிழமை  காலை 10 மணிக்கு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

;