திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜெய்ஹிந்த் நகர் அம்பேத்கர் தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் சஞ்சீவி, ஜெய்ஹிந்த் நகர் தலைவர் சரவணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பிர் எஸ்.பாக்கியம், வடக்கு செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகி வெங்கடையா, அலமேலு, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.