tamilnadu

img

அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் மாதர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

அரசு தலைமை மருத்துவமனையை  தரம் உயர்த்த வேண்டும் மாதர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

ராணிப்பேட்டை,செப்.5- வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை யில் போதுமான மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்கள் பணி அமர்த்தி, மாவட்ட அளவில் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று  ஜனநாயக மாதர் சங்க  ராணிப்பேட்டை மாவட்ட 2வது மாநாடு வலி யுறுத்தியுள்ளது. வெள்ளியன்று (செப்.5) மாவட்ட குழு உறுப்பினர் பொற்கொடி தலை மையில் ஆற்காட்டில் நடை பெற்ற மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். மேரி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர். திலகா வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு முன்வைத்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.டி. சங்கரி நிறைவு செய்து பேசினார். இறுதியாக வி. ஆனந்தி நன்றி கூறினார். இதில் ஆர். கீதா, ஆர். சங்கீதா, ஜி. நீலாவதி, ஆண்டாள், பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அமைப்பு குழு தேர்வு 9 பேர் கொண்ட  மாவட்ட அமைப்பு குழுவின் கன்வீனர் ஆர். திலகா தேர்வு செய்யப்பட்டார். கோரிக்கைகள்   ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும், சாதி ஆணவ படு கொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், மகளிர் உரிமை தொகை தகுதியுள்ள அனை வருக்கும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை நகராட்சி களிலும், மாநகராட்சிகளி லும் விரிவு படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அதி கரித்து வரும் பாலியல் வன்முறை களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.