tamilnadu

img

பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

சென்னை நூறடி சாலை காசி தியேட்டர் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக்கோரி ஞாயிறன்று (ஆக. 24) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதித் தலைவர் டி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மாவட்டப் பொருளாளர் இ.மூர்த்தி தொடங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன், பகுதிச் செயலாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.