பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை, ஜுலை16- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சேதாரக்குப்பம் ஊராட் சிக்கு உட்பட்ட எஸ்.மோட்டூர் பகுதியில் 3தலைமுறையாக நீர்நிலை புறம்போக்கில் 15 இருளர் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசாங்கத்தின் தொகுப்பு வீடுகள் திட்டத்தில் இங்கு வசிக்கும் பயனாளிகள் தேர்வாகியும், வீட்டுமனை பட்டா இல்லாத காரணத்தினால் வீடு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா கோரி சிபிஎம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தின் போது பட்டா வழங்கு வதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரி விக்கிருக்கின்றனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்த நிலையில் புதனன்று பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள், சிபிஎம் வட்ட செயலாளர் அப்துல்காதர் தலைமையில் வந்தவாசி வட்டாட்சியர் தட்சணாமூர்த்தியிடம் பட்டா கேட்டு மனு அளித்தனர். நிகழ்வில் கட்சி யின் மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் சுகுணா, வட்டக் குழு உறுப்பினர் சுகுமார், கிளை செயலாளர்கள் தேவராஜ், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.