கதிர்வேல் நகர்-மீதிகுடி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
சிதம்பரம், ஜூலை 23 - சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள கதிர்வேல் நகர் -மீதிகுடி இடையே உள்ள ரயில்வே கேட்டில் ரயில் வரு வதற்காக காத்திருப்பதால் அலுவலகம், பள்ளி, கல்லூரி களுக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர் வேல் நகரில் இருந்து மீதிகுடி செல்லும் சாலை யில் கதிர்வேல் நகரில் ரயில்வே கேட் அமைந்துள் ளது. இந்த ரயில்வே கேட் வழியாக சிதம்பரம் நகரத் திற்கு கதிர்வேல் நகர், சரஸ்வதி அம்மாள் நகர், தமிழன்னை நகர், முத்தையா நகர், மீதிகுடி, கோவிலாம் பூண்டி, நற்கந்தன்குடி, சிதம்பரநாதன் பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மாணவர்கள் தினந்தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். அதேபோல், சிதம்பரம் நகரத்தில் இருந்து கோவிந்த சாமி தெரு, கொத்தங்குடி தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ரயில்வே கேட் வழியாக அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இந்த கேட் வழி யாக ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள். ஒருமுறை ரயில்வே கேட் போடப்பட்டால் இரு பக்கத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதே வெயில் மற்றும் மழைக் காலங்களில் ரயில் வருவ தற்கு கேட் போட்டுவிட்டால் ஒதுங்குவதற்கு கூட இட மில்லாமல் ரயில் சென்று கேட்டு திறக்கும் வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவசர ஊர்தியோ வாகனங்களோ ரயில்வே கேட்டில் நின்றால் 10 முதல் 20 நிமிடம் வரை காத்திருக் கும் சூழல் ஏற்படும். போக்குவரத்து நெரிசலை போக்க அமைக்கப்படும் வெளிவட்ட சாலையின் நோக்கமே நிறைவேறாது. எனவே இந்த ரயில்வே கேட் உள்ள இடத்தில் அண்டர் பாசிங் எனப்படும் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என இவ்வழியாக செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரயில்வே கேட் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.