tamilnadu

img

ராயக்கோட்டை மார்க்கெட் அருகில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

ராயக்கோட்டை மார்க்கெட் அருகில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, செப்.7 – வளர்ந்து வரும் பகுதியான ராயக்கோட்டையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மார்க்கெட் அருகில் மேம்பலாம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை வட்டம், கெல மங்கலம் ஒன்றியத்தில் ராயக்கோட்டை வேக மாக வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். ராயக்கோட்டை அருகில் நாகமங்கலத்தில் சுமார் 20ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றக்கூடிய டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை,இன்னும் சில சிறிய தொழிற்சாலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அமைந்துள்ள நிலையில் தற்போது மேலும் பல தொழிற்சாலைகள், தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய காய்கறி, மாங்காய் மார்க்கெட் அருகில் ஓசூர் செல்லும் புதிய 4 வழி நெடுஞ்சாலையும் நாக மங்கலம் தொழிற்சாலைகளுக்கு செல்லும் சாலையும்,ராயக்கோட்டை சாலையும் சந்திக்கும் கூட்டுரோடு உள்ளது.இதன் அருகில் தனியார் மேல்நிலைப்பள்ளியும், அரசுப்பள்ளியும் உள்ளது.பல வணிக வளாகங்கள் புதிதாக உருவாகி வருகிறது.  தினமும் காலை,மாலை வேளையில் நாக மங்கலம் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடம், மார்க்கெட்,ஓசூர் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்,கனரக வாக னங்கள் கிரஸர்களுக்கு சென்று வரும் டிப்பர்கள் ஆயிரக்கணக்கில் இந்த இடத்தை கடந்து பயணிக்கின்றன.  இந்நிலை யில் காலை,மாலை வேளைகளில் இந்த கூட்ரோடு சந்திப்பில் வாகனங்க ளும் பயணிகளும் குறுக்காக நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் பல நேரங்களில் பல நாட்களில் 4 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்கி ராயக்கோட்டை நகரை ஸ்தம்பிக்கச்செய்கிறது. வளர்ந்து வரும் நகரின் கூட்ரோடு பகுதியான மார்க்கெட் அருகில் மேம்பாலம் அமைக்க வேண்டும்,போதிய போக்குவரத்து காவலர்களை பணிய மர்த்திட வேண்டும் என சிபிஎம் ராயக்கோட்டை பகுதி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.