tamilnadu

img

பதிவு பெறாத நெசவாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு வரவேற்பு

சென்னை, மே 21- நலவாரியத்தில் உறுப்பின ராக பதிவு பெறாத நெசவாளர்க ளுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை கைத்தறி சம்மேளனம் வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் இ.முத்துகுமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று நோய் பாதிப்பின்காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலை  இழந்து வறுமையில் தள்ளப்பட்டி ருக்கிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க  வேண்டும் என்று தமிழ்நாடு கைத்  தறி நெசவுத் தொழிலாளர் சம் மேளனம் (சிஐடியு) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  

இந்த பின்னணியில், தமிழக  அரசு அனைத்து நெசவாளர்க ளுக்கும் நிவாரணம் வழங்கா மல் நலவாரிய பதிவில் இருக்கக் கூடிய சுமார் ஒரு லட்சம் நெச வாளர்களுக்கு மட்டும் ரூ.2000  நிவாரணம்  என்கிற அறிவிப்பு கள் வெளியிட்டது. இதன்படி இன்னும் பெரும் பாலானவர்களுக்கு இந்த நிவார ணம் முழுமையாக கிடைக்க வில்லை என்பதையும் தமிழக அரசின் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறோம். நலவாரியத்தில் இல்லாத அனைத்து நெசவாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று  சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங் கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பின்னணியில், நலவாரிய  பதிவில் இல்லாத நெசவாளர்க ளுக்கும் ரூ. 2000 வழங்கப்படும் என்கிற தமிழக அரசு அறிவிப்பை சிஐடியு வரவேற்கிறது.

அதேநேரத்தில் இந்த நிவார ணத்தை வழங்குவதற்கு தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டும் என்கிற நிபந்த னையை தமிழக அரசு தெரிவித்தி ருக்கும் ஆலோசனைகளை திரும்பப்பெற வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம். சொந்த வீடு வைத்துள்ள வர்கள் மட்டுமே இலவச மின்சார திட்டத்தில் பயனாளிகளாக இருக்கமுடியும். வாடகை வீட்டில்  இருக்கும் நெசவாளர் குடும்பங் கள் இலவச மின்சார திட்டத்தில் பயனடைய முடியாது.  வாடகை வீட்டில் அதிக அள வில் நெசவாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே இலவச மின்சாரம் என்கிற அந்த நிபந்த னையை தவிர்த்து விட்டு அனைத்து நெசவாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்திருக்கிறார்.

;