மணல் குவாரியில் உயிரிழந்த மாணவர்களுக்கு நிவாரணம் சிபிஎம் போராட்டம் வெற்றி
சிதம்பரம், செப்.18- சிதம்பரம் அருகே மணல் குவாரி யில் உயிரிழந்த மாணவர்களின் குடும்ப த்திற்கு நிவாரணத் தொகையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். சிதம்பரம் அருகே தச்சகாடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சவுடு மணல் குவாரி உள்ளது. இதில், தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்க சென்ற பி. முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஷேக் சுல்தான், இலியாஸ் ஆகியோர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்ப த்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரங்கிப்பேட்டை ஒன்றிய சிபிஎம் செய லாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதையடுத்து, சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலா ரூ. 3 லட்சம் நிவாரணத்திற்கான காசோலை களை மாணவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சாராட்சியர் மாலதி, நகராட்சி ஆணையர் மல்லிகா, வட்டாட்சியர் கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.