tamilnadu

img

நீலகிரியை தொடர்ந்து கோவை, தேனிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை... 

சென்னை
தென்மேற்கு பருவகாற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நீலகிரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமும் நீலகிரி, கோவை, தேனி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து ஆய்வு மையம் விரிவாக தெரிவிக்கப்ட்டுள்ள அறிக்கையில்," தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதனால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற 10-ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கூடுதல் அளவிற்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  தென்காசி மாவட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் 3.5 மீட்டரில் இருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;