tamilnadu

img

ரயில்வே கோரிக்கைகளுக்காக ஆக.28 கடலூரில் ரயில் மறியல் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

ரயில்வே கோரிக்கைகளுக்காக  ஆக.28 கடலூரில் ரயில் மறியல் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

கடலூர், ஆக. 18- கடலூர் மாவட்ட மக்களின் ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.28 ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக மாநில அமைப்பு செயலாளர் தி.ச.திருமார்பன், தி.க. மாவட்டத் தலைவர் எழிலேந்தி, சிபிஐ சார்பில் கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, மமக செயலாளர் அபூபக்கர், சித்திக், காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜாராம், சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணை யத்தின் தவறான நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமையை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஒன்றிய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து அனைத்து கட்சியின் சார்பாக வருகின்ற வியாழக்கிழமை (ஆக.21) ஜவான் பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், கடலூர் திருப்பாப்புலியூர் என ரயில் நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மயிலாடுதுறை கோவை ரயில், விழுப்புரம் தாம்பரம் பாசஞ்சர் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் மற்றும் மன்னார்குடி, கம்பன், ராமேஸ்வரம், உழவன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். கடலூர் துறைமுகத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் திருப்பாப்புலி யூர் வரை நீட்டிக்க வேண்டும். கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் பிளாட் பாரத்தில் மேற்கூரை குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விழுப்புரம்-தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதையை அமைக்க வேண்டும், கடலூர் துறைமுகம், புதுச்சேரி-திண்டி வனம் இருப்புப்பாதை திட்டத்தை உரு வாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரும் ஆகஸ்ட் 28 அன்று திருப்பாப்புலியூர் ரயில் நிலை யத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.