சாலையோர வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குக
கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் கோரிக்கை
திருவள்ளூர், ஆக 6- கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு என கட்டப்பட்ட கடைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி பகுதி மாநாடு செவ்வாயன்று (ஆக 5) நடை பெற்றது. இதற்கு பகுதி தலைவர் வி.ஜோசப் தலைமை தாங்கினார். ராதிகா வரவேற்றார். பகுதி செயலாளர் வி.குப்பன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் பகுதி தலைவராக வி.குப்பன், செயலாளராக வி.ஜோசப், பொருளா ளராக எஸ்.தமிழரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலை யத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு என கட்டப்பட்ட கடைகளை பயனாளி களிடம் ஒப்படைக்க வேண்டும், வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், அதே போல ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கவரைப்பேட்டை ஆகிய பஜார்களில் சாலையோரம் உள்ள சிறுகடை வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.