tamilnadu

img

கூடுவாஞ்சேரி பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வண்டலூர், அக்.23- கூடுவாஞ்சேரி  பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குப்பை தேக்கத்தால்  சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் புதனன்று (அக். 23)  பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து குடியிருப்போர் நலவாழ்வு சங்க நிர்வாகி கோகுல் நாதன் கூறுகையில், ‘கோவிந்தராஜபுரம் நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்’ என்றார்.