தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம்
கடலூர், ஆக.10- 1950 ஆம் ஆண்டு சட்டத்தின் 3ஆவது பத்தியை நீக்கவேண்டும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்து ரையை அமல்படுத்த வேண்டும், தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடலூரில் எஸ்சி, எஸ்டி பணிக்குழு சார்பில் பழைய மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் புதுவை உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கினார். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முதன்மை குரு எஸ். குழந்தைச்சாமி, பொருளாளர் ஏ.ஜே. பிலோமின்தாஸ், பேராயரின் பொதுநிலை குரு எம்.சாமி நாதன், தேவ சகாயராஜ், வின்சென்ட் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். காட்டு மன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பி னர் சிந்தனைச் செல்வன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், வி.சுப்ப ராயன், ஆர். அமர்நாத் உள்ளிட்டோர் பேசி னர். மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாபு ஒருங்கிணைத்தார்.