மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, அக்.9 – மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்கக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மரவள்ளி கிழங்கிற்கு டன் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேகோசர்வ் ஆலையை விரைவில் அரசு அமைக்க வேண்டும், மரவள்ளிக்கிழங்கை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஜவ்வரிசி மூட்டை ஒன்றிற்கு ரூ.4,500 மற்றும் ஸ்டார்ச்சிற்கு ரூ.3,500 இந்த ஆண்டு கொள்முதல் விலையாக அறி வித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும், சேகோசர்வ் என்கின்ற கூட்டுறவு நிறுவனத்தை பாது காத்திடும் வகையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சேகோசர்வ் மூலம் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பணிகள் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற பிற பயிர்களுக்கு உள்ளது போல் மரவள்ளி கிழங்கிற்கும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலு வலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, பொரு ளாளர் எம்.சி.ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர் பி.தெய்வீகன், பி.மணி, பி.தங்கராசு, சங்கராபுரம் ஒன்றிய செய லாளர் ஜி.மணிமாறன், ஒன்றியத் தலைவர் எஸ்.கோவிந்தன், டி.சாமிநாதன், எல்.ராமசாமி, ஆர்.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
