தீபாவளி போனஸ் கேட்டு போராட்டம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்ரூ.5ஆயிரம் வழங்க வலியுறுத்தி கடலூரில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் பி. கருப்பையா, சிஐடியு மாவட்ட செயலாளர் டி. பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5000 ம் கேட்டு மாநிலம் முழுவதும் முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் இதற்கான மனுவை மாவட்டதலைவர் ஆர்.பச்சையப்பன் தலைமையில் கொடுத்தனர். மாவட்டச் செயலாளர் எஸ்.சேகர், பொருளாளர்டி.எஸ்.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
