tamilnadu

img

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

தோழர் வைரமுத்துவை சாதி ஆணவ படுகொலை செய்ததைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருப்பத்தூரில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தீஒமு மாவட்ட துணைத்தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தாலுகா செயலாளர் தியாகமூர்த்தி, காமராஜ் (சிபிஎம்), கேசவன் (சிஐடியு) உட்பட பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வேலூரில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் திலீபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீஒமு மாவட்ட தலைவர் பி.காத்தவராயன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா உள்ளிட்ட பலர்  உரையாற்றினர்.