சாதி ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் தோழர் வைரமுத்து சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஓட்டேரியில் வெள்ளியன்று (செப். 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், பொருளாளர் வீ.ஆனந்தன், மாவட்டத் துணைத் தலைவர் மா.பூபாலன், மாவட்ட குழு உறுப்பினர் பா.தேவி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.நித்தியராஜ், சிபிஎம் பகுதி செயலாளர் வி.செல்வராஜ், கே.சுரேஷ், கே.முருகேசன் மாவட்ட குழு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.