எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் நிரல் திறன் போட்டி
திருவண்ணாமலை, செப்.29: திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் போனிபைட்ஸ் இடியூ டெக் நிறுவனம் சார்பில், பல்வேறு கல்லூரிகளுக்கிடையிலான ஹேக்கத்தான் (நிரல் திறன் போட்டி) நடைபெற்றது. இதில் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் என்.புருஷோத்தமன் வரவேற்றார். பிஆர்ஓ சையத் ஜகிருத்தீன் மற்றும் போனிபைட்ஸ் நிறுவனத்தின் வி.ராகுல் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பி.தினேஷ், ஆர்.தருண் மற்றும் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் சிறப்
