tamilnadu

img

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம், ஆக. 23- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் தமிழக அரசின் மகளிர் திட்டம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை நாடுநர்க ளுக்கு பணி நியமன ஆணையை வழங்கி னார். இந்த முகாமில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை நாடு நர்கள் 1000-த்திற்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“2025-26 ஆம் ஆண்டிற்கான முதலாவது வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 72 தனியார் நிறுவனங்களை இளை ஞர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு உரிய வேலை வாய்ப்புகளை பெற்று பயன டைய வேண்டும். இந்த முகாம் மாண வர்களின் சொந்த ஊர்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது”என்றார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கிஷன் குமார், அண்ணாமலை நகர் பேரூ ராட்சி மன்ற தலைவர் பழனி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.