tamilnadu

img

பொதுமக்கள் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை

பொதுமக்கள் கருத்துகள் மற்றும்  கோரிக்கைகளுக்கு முன்னுரிமை 

கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் கருத்துகள் மற்றும்  கோரிக்கைகளுக்கு முன்னுரிமை  கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவிப்பு ராணிப்பேட்டை, ஆக 16 –  ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் வெள்ளியன்று (ஆக 15) நாட்டின் 79வது சுதந்திரத் திருநாளையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும், கோரிக்கைகளுக்கும் வரும் காலங்களில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இதனைப் பொருத்து தான் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்படும். மேலும் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இளம் வயதில் திருமணம் நடத்தக்கூடாது. வரும் ஆண்டுகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகள் வரவுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்தார்.