அச்சு மற்றும் டிஜிட்டல் கண்காட்சி துவக்கம்
சென்னை, ஜூலை 10- அச்சுத்துறை மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான ப்ரத்யோகமான கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கியது. 185 கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்று தங்க ளது நிறுவனத்தின் இயந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். பிரிண்ட் எக்ஸ்போ சென்னை மீடியா எக்ஸ்போ சென்னையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. அச்சுப்பொறிகள், அச்சகத்திற்கான இயந்திர உற்பத்தியாளர்கள், விளம்பர நிறுவனங்கள், முகவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் அச்சிடும் மற்றும் விளம்பரத் துறை யில் தென்னிந்தியா ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்வதால் இந்த கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் டிஜிட்டல்-ஃப்ளெக்ஸ் பிரிண்டிங், ஆஃப்செட், பைண்டிங், கன்வெர்ட்டிங் மற்றும் பேக்கேஜிங் டு டிஜிட்டல் சிக்னேஜ் மற்றும் வெளிப்புற விளம்பர தீர்வு கள், அச்சிடும் உப கரணங்கள், 3டி லேசர் உப கரணங்கள், டிஜிட்டல் எல்இடி விளம்பர பலகை கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.