tamilnadu

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வித் துறையில் கண்துடைப்பாக 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு, மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக மாறுதல் ஆணைகளை  வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வெங்கடாபதி, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணன், கீழ்பென்னாத்தூர் வட்டார செயலாளர் அய்யாசாமி,  ச. டேவிட்ராசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.