சென்னை,மார்ச் 12- இஸ்லாமிய மதத்தினரின் பண்டி கைகளில் முக்கியமானது ரமலான். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லா மிய மதத்தினர் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக் கான ரமலான் நோன்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் செவ்வாயன்று (மார்ச் 12) தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரமலான் நோன்பு திறப்பையொட்டி தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் இஸ்லா மிய மதத்தினருக்கு அரிசி, துணிமணி கள், நிதியுதவி அடங்கிய நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், ‘உதவுதல் நம் முதல் கடமை’ என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட 2,000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பதற்கான 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம் பழம், நிதியுதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாள மாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ வேலு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.