மின்வாரிய சிஐடியு முன்னாள் செயலாளர் ஏ.கருணாநிதிக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி, செப். 15 - தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் 38 ஆண்டு கள் பணிபுரிந்து, மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் சிஐடியு சங்கத்திலும் செயலாளர் உட்பட பல்வேறு பொருப்புகளை வகித்து ஓசூர் சிப்காட் மின்சார வாரியத்தில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறும் ஏ.கருணாநிதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, தலைவர் சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் சிவப்பிரகாஷ், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் சேது மாதவன், சந்திரசேகர், லிக்காய் சங்க மண்டல தலைவர் முருகன் நாயனார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர். ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ஜெயராமன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றியச் செயலாளர் தேவ ராஜ், மின்வாரிய ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பாராட்டினர்.