சென்னை, ஜூலை 14- பயிற்சி மருத்துவர்கள் மற்றும் நோயியல் நிபுணர் களுக்கான 3 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை யில் நடைபெற்றது. கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டியை சேர்ந்த மூன்று மூத்த ஆலோசகர்கள் மற்றும் டாக்டர்கள் கே.எஸ். மௌலீஸ்வரன், ஜாய் வர்கீஸ், மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் இணைந்து இந்த புத்தகங் களை எழுதியுள்ளனர்.
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் நோயியல் நிபுணர் களுக்கு மிகவும் பயன் படும் இந்த புத்தகம் “அட்லஸ் ஆப் பேசிக் லிவர் ஹிஸ்டாலஜி பார் பிராக்டிசிங் க்ளினிஷியன்ஸ் அன்ட் பேத்தாலஜிஸ்ட்ஸ்” என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. இந்த புத்தகத்தை பிரபல கல்லீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் யோகேஷ் சாவ்லா, எழுத்தாளர் லேனா தமிழ் வாணன் ஆகியோர் வெளி யிட்டனர். கல்லீரல் நோய் களைக் கண்டறியும் மருத்து வர்கள் மற்றும் நோயியல் நிபுணர்களுக்கு உதவிடும் வகையில் இது புத்தகம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகம் குறித்து டாக்டர் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறுகையில், இந்த புத்தகம் கல்லீரல் நோயை கண்டறிதல் மற்றும் குணப் படுத்த மருத்துவர்களுக்கு உதவும் என்றார். இந்த புத்தகத்தை, ஜெர்மன் பிரிட்டிஷ் பதிப்பகமான ஸ்பிரிங்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் Amazon.in-ல் கிடைக்கிறது.