tamilnadu

img

பொங்கல் பண்டிகை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா அறிமுகம்

சென்னை:
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மூன்று நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

பொங்கல் விடுமுறையில் 3 நாள்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா புதியதாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுற்றுலா பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று அதாவதுதிருவள்ளுவர் தினத்தில் இரவு 9 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகதலைமை அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு சென்று அங்கிருந்து அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டை காண்பதற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சுற்றுலாவிற்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் சொகுசு பேருந்து இயக்கப்படும். இது ஜனவரி 16அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை5.30 மணிக்கு மதுரை சென்றடையும். ஓட்டல் தமிழ்நாடு மதுரையில் காலை உணவு வழங்கப்படும். ஜனவரி 17 அன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் சென்றடையும். பின்னர் இரவு மதுரையில் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.ஜனவரி 18 அன்று காலையில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோவில் ஆகிய இடங்களுக்குவழிகாட்டி உதவியுடன் அழைத்து செல்லப்படுவார்கள்.இரவு 10 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 19 விடியற்காலை சென்னை வந்தடைவார்கள்.இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 4,300 மற்றும் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.3,450 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சுற்றுலாவிற்கு குளிர்சாதனப்பேருந்து இயக்கப்படும். குளிர்சாதன வசதியுள்ள அறை வேண்டுவோருக்கு ரூ. 4500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;