tamilnadu

img

தென்கரைக்கோட்டையை பாதுகாத்து சுற்றுலா தளம் அமைத்திட கோரிக்கை

தருமபுரி, அக்.8- தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்தில் வர லாற்று சிறப்புமிக்க தென்கரைக் கோட்டையில் உள்ள சிற்பங் கள் சிதிலமடைந்து வருகிறது. இந்து சமய  அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையை சீரமைத்து சுற்றுலா தளமாக மாற்றப்பட வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   விஜயநகர பேரரசின் கடைசி மன்னன் சீலப்ப நாயக்கர். இவ ருடைய ஆட்சிக் காலத்தில் 39.43  ஏக்கரில் தென்கரைக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. சீலப்ப நாயக்கர்  கனவில் ராமர் திருமணக் கோலத் தில் காட்சி தந்ததால், இங்கு ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் கட்டப் பட்டதாகக் கோட்டை தல வரலாறு கூறுகிறது. கோட்டையின் உள்பகுதியில் அரண்மனை, தானியக் களஞ்சியம், குதிரை லாயம், ராணி நீராடும்  குளம், எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் வகையிலான நுழை வாயில், அகழிகள் மற்றும் மண் ணால் சுமார் 100 அடி உயரம்  கொண்ட மதில் சுவர், பீரங்கிகள் நிறுத்துவதற்கான சூரியமேடு, கற் களால் வடிவமைக்கப்பட்ட குண்டு கள் இருந்தன. வளாகம் கலை நயத் துடனும் பல்வேறு கற்சிற்பங்கள்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இங் குள்ள ஒவ்வொரு தூண்களை  தட்டும்பொழுது வெவ்வேறு வித மான மணியோசை வரும் வகை யில் செதுக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். பீஜாப்பூர் சுல்தான் வசமிருந்த இக்கோட்டை 1652ஆம் ஆண்டு மைசூர் பேரரசர் உடை யார் கைப்பற்றினார். பின் 1768 ஆம்  ஆண்டு ஐதர் அலி காலத்தில், கர்னல் உட் என்ற பிரித்தானிய  தளபதியால் கோட்டை கைப் பற்றப்பட்டு, மீண்டும் அதே  ஆண்டு ஐதர் அலியால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது கோட்டை வளாகம் முழுவதும் அடர்ந்த மரங்கள் இருப்பதால் சுற்றிப்பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.  இந்நிலையில் பல நூற்றாண்டு களாக  பராமரிப்பின்மையால் கட்டி டங்களில் ஆங்காங்கே விரிசல்  விழுந்து இடிந்து தரைமட்டமாகி யுள்ளது. மேலும் இக்கோட்டை வளாகத்தில் மது அருந்துதல், சீட்டு விளையாட்டு உள்ளிட்ட சமூக  விரோதச் செயல்களில் சிலர் ஈடு பட்டு, மது பாட்டில்களை ஆங் காங்கே சிதைத்துவிட்டு, இங்குள்ள கற்சிற்பங்கள் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.   வரலாற்று சிற்பங்களைப் பாது காக்கும் வகையில் இக்கோட்டை யில்  பாதுகாவலர்களை நியமித்து பாதுகாக்கப்பட்டிருந்தால் இன்று தொல்லியல் துறையை சார்ந்த  மாணவர்கள், வரலாற்று ஆர் வலர்கள் பயன்பெற்றிருப்பார்கள். இதுபோக தருமபுரி மாவட்டத் தில்இருக்கக்கூடிய மாணவர்க ளுக்கும்,இளைஞர்களுக்கும் இதுபோன்ற கோட்டை தங்கள் பகுதியில் இருப்பதே தெரியாது எனவும், மேலும் சமூக அக்கறை யுடன் தமிழக அரசு தென்கரைக் கோட்டையில் உள்ள வரலாறு சார்ந்த அனைத்தையும் பாதுகாக்க   நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.  அதேபோல் சுற்றுலாத் தளமாக  மாற்ற வேண்டும் என தொல்லியல்  ஆர்வலர்கள்  வலியுறுத்துகின்றனர். மேலும், இக்கோட்டையில் குடிநீர், தங்கும் வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இங்கு திரு மண மண்டபம் ஏற்படுத்த வேண் டும். தமிழக முதல்வரின் அன்ன தானத் திட்டம் தொடங்க வேண் டும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துத் தர வேண் டும் என்றும் அப்பகுதி மக்கள் விரும் புகின்றனர்.