கவிஞர் வாணிதாசன் பிறந்த நாள் விழா
புதுச்சேரி, ஜூலை 22 - கவிஞர் வாணிதாசன் பிறந்த நாளையொட்டி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பாகூரில் நடைபெற்றது. பாகூர் சேலியமேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாணிதாசன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். கவிஞர் வாணிதாசனின் 111-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது கல்லறையில் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நா.சண்முகம், முதுகலை தமிழாசிரியர் சி.ஜெகதீசன், அ.பக்கிரி, பி.கல்கி, மு.முனியன், துரை.வேலாயுதம், க.கலியன், ப.சரவணன், முத்துக்குமரன், ஆனந்தராமன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.