குடிநீரால் உடல் உபாதைகள்! உளுந்தூர்பேட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, அக்.16 - உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் எடைக்கல் கிராம பொதுமக்கள் சார்பில் (அக்.16) வியாழன ன்று பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கும் குடிநீரால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதால் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டச் செயற்குழு எம்.கே.பழனி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், எ.ரீட்டா, டி.எஸ்.மோகன், ஒன்றியச் செயலாளர் வேலா.பாலகிருஷ்ணன், நகரச் செயலாளர் பி.ஸ்டாலின், திருநாவலூர் ஒன்றியச் செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார், கே.ஆனந்த்ராஜ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உளுந்தூர்பேட்டை அடுத்த எடைக்கல் கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் உப்பு மற்றும் சுண்ணாம்பு அதிகமாக உள்ளதால் அதை அருந்திய இரண்டு குழந்தைகள் உட்பட 22 பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 5-க்கும் மேற்பட்டோர் சிறுநீரகப் பாதிப்பால் உயிரிழந்தனர். குடிநீரால் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் இன்னும் பல்வேறு நபர்களுக்குச் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும் ஆபத்து உள்ளது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் சார்பாக சுகாதார அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்து சுகாதாரமான குடிநீரை வழங்கி தாழ்த்தப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
