tamilnadu

img

100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளர் நியமனம் கோரி மனு

100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளர் நியமனம் கோரி மனு

சிதம்பரம், செப்.29- பரங்கிப்பேட்டை அருகே பு.மடு வாங்கரை கிராமத்தில் 100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளரை நியமனம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி. ஆழ்வார் தலைமையில் வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எல். ஜீவா, க. சுனில்குமார், கே. திருஞானம், எம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நவாபேட்டை கிளைச் செயலாளர் முத்துக்குமாரசாமி மற்றும் பு. மடுவாங்கரை கிராம மக்கள் ஆகியோர் திங்கட்கிழமை(செப்.29) பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் பு. மடுவாங்கரை ஊராட்சிக்குட்பட்ட நவாப்பேட்டை கிராமத்தில் 5வது வார்டில் உள்ள 100 நாள் பணியாளர்களுக்கு அதே வார்டில் உள்ள ஒருவரை பணித்தள பொறுப்பாள ராக நியமித்திட வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் அட்டை உள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.