குடிமனைப் பட்டா கேட்டு பள்ள காந்தூரில் மனு
காஞ்சிபுரம், ஜூலை 26- சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பள்ள காந்தூர் கிராமத்தில் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாமல் 35 குடும்பங்களை சேர்ந்தவர் கள் வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். திருப்பெரும்புதூர் வட்டத்திற்கு உட் பட்ட, காந்தூர் கிராமத்தில் சுமார் 35 தலித்குடும்பங்கள் கடந்த 10ஆண்டுகால மாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் விவசாயத்தில் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர். குழந்தைகளுக்கு மருத்துவம், படிப்பு செலவு கள் ஈடுகட்டி வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி துறை சார்பில் 35 குடும்பங்களுக்கு இலவசமாக குடிமனையுடன் வீடுகட்டி பட்டா வழங்க வேண்டும் என சிறுமாங்காட்டில் நடை பெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் சிபிஎம் காந்தூர் கிளை சார்பில் திருப்பெரும்புதூர் வட்டாச்சியரிடம் தனித் தனியாக மனுக்கள் அளித்தனர். அந்த மனுவில், பள்ள காந்தூரில் பல காலமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோ தரர்கள் ஓரே வீட்டில் சிரமத்தோடு வசித்து வருவதாகவும். அதனால், எங்கள் குடும்பத் தில் உள்ளவர்களுக்கு தனியாக வீடு கட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. மனு அளித்த குடும்பத்தலைவிகள் தனித்தனியாக வீட்டுமனையுடன் வீடு கட்டி குடி அமர்த்த வேண்டும் என பெண்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கையை வைத்தனர். இந்நிகழ்வில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் சி.சங்கர், சிபிஎம் திருப் பெரும்புதூர் வட்ட செயலாளர் ப.வடி வேலன், ஆர்.சுகுந்தன், சி.அன்பழகன் எ.வி.ரமேஷ் மற்றும் பள்ள காந்தூர் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.