tamilnadu

img

‘கலைஞர் கனவு இல்லம்’ கோரி மாற்றுத்திறனாளி மனு

‘கலைஞர் கனவு இல்லம்’ கோரி மாற்றுத்திறனாளி மனு

விழுப்புரம், ஜூலை 7 -  மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், காட்டு சிவிரி கிராமம் நடுத்தெரு வைச் சேர்ந்த ஏழுமலை. இவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், தனக்கு மகேஸ்வரி (28), மதுஷ்மா (16) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக வும், மாற்றுத்திறனாளியான தான் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகள் பழமை யான ஓட்டு வீட்டில் வாழ்ந்து வருவதாகவும், அந்த வீடு ஆங்காங்கே இடிந்து போய் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனது பெண் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிக்க முடியாத காரணத்தால் தற்போது உறவினர் வீட்டில் தங்கியுள்ளதாக தெரி வித்துள்ளார். பருவ மழை மற்றும் திடீர் மழைக்காலங்களில் வசிக்க முடியாத ஆபத்தான சூழ்நிலையிலும், மழைப் பெய்யும் காலங்களில் தெருவில் வரும் வெள்ளம் வீட்டின் உள்ளே வந்து தேங்கி நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார். பழமை வாய்ந்த சிதிலமடைந்த வசிக்க முடியாத நிலை யில் உள்ள வீட்டில் தானும் தன் மனைவியும் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்  ளார். எனவே தனக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.