1 )கொரோன கால ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் ஆக.20 தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக அம்பத்தூரில் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.ரவிச்சந்திரன், சி.சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 )திருவள்ளூர் நகரில் துண்டுப் பிரசுரம் விநியோகித்தை மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் உள்ளிட்டோர் உடனுள்ளனர்.
3 )கிருஷ்ணகிரி மாவட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற இயக்கத்தில் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி தொடங்கி வைத்தார். வட்டச் செயலாளர் பிஜி.மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர்.
4) கடலூரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநில குழு உறுப்பினர் கோ.மாதவன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், கருப்பையன், சுப்பராயன், நகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 )விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார்.