முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துக
அரசுக்கு ஓய்வூதியர்கள் கோரிக்கை
சென்னை, ஆக. 19- நீதிமன்ற வழிகாட்டுதல் படி முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை மேற்கு கிளை 16ஆவது மாநாடு அம்பத்தூரில் செவ்வாயன்று (ஆக. 19) நடைபெற்றது. தலைவர் என்.அச்சுதன் தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் எம்.புரு ஷோத்தமன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பி.ஆர்.சுதர்சன் சங்க கொடியை ஏற்றினார். மாநில துணைத் தலைவர் வி.மன்னார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.எஸ்.முனியாண்டி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். காஞ்சி மண்டல செயலாளர் டி.மோகன், மாநிலச் செயலாளர்கள் எஸ்.கணேசன், டி.கே.சம்பத்ராவ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேற்கு கிளை தலைவர் எஸ்.தசரதன், செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.மாநில பொருளாளர் ஏ.பழனி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக இணைச் செயலாளர் பி.எஸ்.பார்த்தசாரதி வரவேற்றார். இணைச் செயலாளர் டி.டி.ஜெயபிரகாசம் நன்றி கூறினார். தீர்மானங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை எண்.100, 6 மற்றும் 7யை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீட்டை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும், குடும்ப நல பாதுகாப்பு நிதியை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், 8ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் படி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், ஒப்பந்த பணிக்காலத்தை இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக என்.அச்சுதன், செய லாளராக எஸ்.பாலசுப்பிரமணியன், பொரு ளாளராக பி.எஸ்.முனியாண்டி உள்ளிட்ட 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.