திருத்தணி ரயில் நிலையம் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
திருத்தணி, அக்.7- திருத்தணி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆபத்தான முறையில் தண்ட வாளத்தை கடந்து செல்வதை ரயில்வே போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை-திருத்தணி இடையே இயங்கும் புறநகர் மின்சார ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாண வர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் சென்னைக்குச் செல்லும் பயணிகளும் பூ வியாபாரிகளும் எளிதாக ரயில் நிலையத்தை சென்றடைய தண்டவாளத்தை கூட்டமாக கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இருப்பினும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தி, தண்டவாளத்தை கடக்கும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
