tamilnadu

img

கலாநிதி வீராசாமியை ஆதரித்து ப.சிதம்பரம் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திமுக கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜன் தலைமையில் கொளத்தூர் பெரவள்ளூரில் வியாழனன்று (ஏப். 4) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மேயர் ஆர்.பிரியா, பகுதிச் செயலாளர் வ.முரளிதரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விசிக மாவட்டச் செயலாளர் து.அப்புன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.