tamilnadu

img

சேத்துப்பட்டில் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி

சேத்துப்பட்டில் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி

சீத்தாராம் யெச்சூரி நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நடைபெற்ற சிபிஎம் கிளைச் செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.பாரி, என்.சேகரன், தலைமையில் நடைபெற்றது. கலந்து கொண்டவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டியிடம் உடல் தானப் படிவத்தை வழங்கினர். இதில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலாநாதன், கே.வாசுகி, எஸ்.ராமதாஸ், எ.லட்சுமணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.அண்ணாமலை, எம்.தமிழ்ச்செல்வி, ச.குமரன், சேத்துப்பட்டு வட்டார செயலாளர் எல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.